முழுநேர மாணவர்களுக்கான இரண்டாம் அரையாண்டு ஆரம்பம்

பட்டப்பின் கல்வி டிப்ளோமா 2022/2023 கல்வியாண்டு முழுநேர மாணவர்களுக்கான இரண்டாம் அரையாண்டுக் கற்கைநெறிகள் 06.07.2022 புதன்கிழமை தொடக்கம் ஆரம்பமாவதாக கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.திருமதி.ஜெயலக்ஸ்மி இராசநாயகம் தெரிவித்துள்ளார். தற்போதைய நாட்டின் எரிபொருள் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக விரிவுரைகள் இணையவழியில் நடக்கவுள்ளதுடன்…

Continue Readingமுழுநேர மாணவர்களுக்கான இரண்டாம் அரையாண்டு ஆரம்பம்

முழுநேர டிப்ளேமா பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்தன

2020-2021 கல்வியாண்டு முழுநேர பட்டப்பின் கல்வி டிப்ளோமா மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஐனவரி மாதம் நிறைவுபெற்ற இப் பரீட்சையின் பெறுபேறுகள் 21.06.2022 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக மூதவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பரீட்சைப் பெறுபேறுகளை மாணவர்கள் பரீட்சைகள் கிளையில் அல்லது…

Continue Readingமுழுநேர டிப்ளேமா பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்தன

பேராசிரியர் சோ.சந்திரசேகரனுக்கு கல்வியியல் துறையின் அஞ்சலி

இலங்கைக் கல்வி முறைமையிலும் பல்கலைக்கழககங்களின் கல்வியியல் துறை வரலாற்றிலும் கனதியான இடத்தை தனதாக்கிய மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களின் பிரிவு இலங்கை கல்வித் துறையில் மீள் நிரப்ப முடியாத இழப்பாகும். அவரது வெற்றிடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைக்கும் பேரிழப்பாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறையுடன் நீண்டகால தொடர்பினை அறிவார்ந்த ரீதியில் கொண்டிருந்த அவர் வருகைதரு விரிவுரையாளர், இரண்டாம் பரீட்சகர், பட்டப்பின் கற்கைளின் ஆய்வுச் செயற்பாடுகளின் மேற்பார்வையாளர், பரீட்சகர் எனப் பல வகிபாகங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடனும் குறிப்பாக உயர்பட்டப்படிப்புக்கள் பீடம் மற்றும் அதனூடாக கல்வியியல் துறையுடனும் கொண்டிருந்தவர்.
கல்வியியல் சார்ந்த அறிவைப் பரவலாக்குவதில் கனதியான பங்களிப்பை நல்கிய பேராசிரியர் அவர்களின் ஆக்கங்கள் இன்றும் (more…)

Continue Readingபேராசிரியர் சோ.சந்திரசேகரனுக்கு கல்வியியல் துறையின் அஞ்சலி